Saturday, 1 October 2011

முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்..

hidden keywords: thevar,devar, history of thevar, kallar, raja raja cholan,mukkulam, kings of tamilnadu,maravar,தேவர்,

  

முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்..
தலைசிறந்த தலைவர் தெய்வத் திருமகன் தேவர்


 Richard Nixon என்ற அமெரிக்க ஜனாதிபதி “Leaders” என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தலைசிறந்த தலைவனின் காலடித்தடத்தில் வரலாற்றின் இடிமுழக்கத்தை கேட்கிறோம். நூற்றாண்டுகள் பல கடந்து – கிரேக்கம் முதல், ஷேக்ஸ்பியர் தொட்டு, தற்காலம் வரை – சில செய்திகள் தொடர்ந்து வரலாற்று ஆசிரியர்களுக்கும் கவிஞர்களுக்கும் காவியம் படைக்க உந்துகோலாக திகழுமேயானால் அது ஒரு தலைசிறந்த, ஒப்பற்ற ஒரு தலைவனின் நற்பண்புகளும், அவனின் தனிச் சிறப்புமேயன்றி வேறொன்றில்லை.”

எது மற்ற மாந்தர்களில்ருந்து ஒரு தலைவனை வேறுபடுத்துகிறது?எந்த குணம் அளவற்ற காந்தத் தொடர்பை ஒரு தலைவனுக்கும் மக்களுக்கும் இடையே காலம் கடந்தும் காத்து நிற்கிறது? எது ஒரு தலைவனின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறதென்றால், அவனின் முக்கியத்துவமும் அவன் மக்கள் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கமுமேயாகும். ஒரு நாடகத்தின் திரை விழுகும்பொழுது, பார்வையாளர்கள் நாடகத்தை மறந்து தத்தம் வாழ்க்கைக்கு திரும்பிவிடுகின்றனர். ஆனால் ஒரு மகத்தான தலைவனின் வாழ்வில் திரைவிழுகும் பொழுது, அவனது வாழ்க்கை ஒரு நாட்டின் வரலாற்றையே முற்றிலுமாக மாற்றிவிட்டிருக்கும்.” 

இந்த எண்ணங்கள் இன்று என் மனத்தில் உதித்தமைக்குக் காரணமாக அமைந்தது, நான் இன்று பசும்பொன் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றினை, நமது தாய்த் திருநாட்டின் விடுதலை வேழ்வியில் அவரது வீரமிகு அருஞ்செயல்களை படித்தமையே ஆகும்.


தேவர் திருமகனார் ஒரு விடுதலை போராடட்ட வீரர் மட்டுமல்லர் அவர் கோடானுகோடி ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க வீரச்சமர் புரிந்து அவர்களை காத்து நின்ற காவல் தெய்வமாவார். அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்குத் தடையாய் நின்ற சமூக, மூடப்பழக்க வழக்க, அரசியல் கொடுங்கோன்மைகளிலிருந்து மீட்க்க தன் வாழ்வையே தியாகம் புரிந்த ஒப்புயர்வற்ற தன்னலமற்ற தலைவராவார்.


“வள்ளலார்” என்ற பெயர் ஸ்ரீ ராமலிங்க அடிகளாரை மட்டுமே குறிக்கும்
“பெரியார்” என்ற பெயர் E.V.ராமசாமி நாயக்கரை மட்டுமே குறிக்கும்
“அண்ணா” என்ற பெயர் C.N. அண்ணாதுரையை மட்டுமே குறிக்கும்

அதுபோல் 

“தேவர்” என்ற பெயர் தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை மட்டுமே குறிக்கும்.




சென்னையில் நேதாஜி

அந்த மாபெரும் தலைவர்கள் தேவரின் செயல் திரம் மட்டுமன்றி பல துறைகளில் அவர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவுதிரனையும் கண்டு வியந்து பாராட்டினர். இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற மாவீரனை புகழ்ந்து கூறிய இந்த கூற்று நமது தேவர் திருமகனுக்கும் அப்படியே பொருந்தும்.



‘Part of the secret of this stimulating ascendency lay of course in his disdain for most of the prizes, the pleasures and comforts of life. The world naturally looks with some awe upon a man who appears unconcernedly indifferent to home, money, comfort, rank, or even power and fame. The world feels not without a certain apprehension, that here is someone outside its jurisdiction; someone before whom its allurements may be spread in vain; someone strangely enfranchised, untamed, untrammeled by convention, moving independently of the ordinary currents of human action; a being readily capable of violent revolt or supreme sacrifice, a man, solitary, austere, to whom existence is no more than a duty, yet a duty to be faithfully discharged.’

முக்குலம்   வாழ்க  வெல்க  வளர்க.

தொடர்கிறது....








thanks to thevar info

Thursday, 29 September 2011

நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்-நேதாஜி




இந்திய சுதந்திர மாற்றங்கள் :













நேதாஜி, பசும்பொன் தேவர் திருமகனார் :

பசும்பொன் தேவர் திருமகனார் உணர்ச்சிமயமான உரை :

இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.

அந்த நாள்..

1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.


ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!


ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.


நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.


நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.


அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.

அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.

அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.



சென்னையில் நேதாஜி

அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார். இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.


நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர். அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!



இந்திய மாற்றங்கள்:


பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர். கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.


அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.


வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும். நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.

முக்குலம்   வாழ்க  வெல்க  வளர்க.

தொடர்கிறது....






thanks to thevar info

Wednesday, 28 September 2011

தேவர் புகழ் வாழ்க



தேவர் திருமகன் முதல் மேடை





1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார். இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, ‘சகோதர சகோதரிகளே’ என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

களப்போர்

பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்.

ரேகைச் சட்டத்தின் கொடுமை

தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை அடக்குமுறை, அமெரிக்க நாட்டிலே அண்மைக் காலம்வரை கருப்பர்களுக்கு எதிரான அடக்குமுறை. இந்த நாட்டிலே விதைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் காரணமாக நிகழ்த்தப்படு கின்ற, நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அன்றைக்கு முக்குலேத்தோர் சமுதாயத்துக்கு விளைந்த அந்த அடக்குமுறைக்கு என்ன காரணம் என்று கேட்டால், 1897 ஆம் ஆண்டு, 1911 ஆம் ஆண்டு 1923 ஆம் ஆண்டு இந்த மூன்றுமுறையும் குற்றப்பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டது. ரேகைச்சட்டம்.

அந்தச் சட்டத்தின்படி, இவர்கள் எல்லாம் குற்றவாளிகள், இந்த இனத்தில் இந்தக் குடும்பங்களில் பிறந்தவர்கள், இவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், குற்றம் செய்யக்கூடிய பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர். ஆகவே, இவர்கள் தங்களது ரேகைகளைக் காவல் நிலையங்களில் போய்ப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்ல. இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை, காவல்நிலையத்தில்தான் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு நீதியின் கதவுகள் திறக்காது. இந்தக் கொடுமை இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு எங்காவது உண்டா?

அதனுடைய 10 ஏ பிரிவு மிகக்கொடுமையானது. அதன்படி, ‘நான் ரேகை கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னால், அதற்கு அபராதமும் போட்டு ஆறு மாதங்கள் சிறையில் தள்ளலாம். இந்தக் கொடிய சட்டத்தை எதிர்த்து, ஜார்ஜ் ஜோசப் என்பவர் முதலாவது தர்ம யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். அந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து நடத்தியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.

அடக்குமுறைக்கு அஞ்சாதே

ரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறபோதுதான் அவர் சொன்னார்; கொடும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சமூகத்து வீரவாலிபர்களைப் பார்த்துச் சொன்னார்; ‘அடக்குமுறைக்கு அஞ்சாது வாருங்கள், ரேகை புரட்டுவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம், ரேகை கொடுக்காதீர்கள்’ என்றார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சீறி எழுந்தார்கள் தென்னாட்டில். துப்பாக்கிகளால் அவர்களை மிரட்டமுடியாது என்பதை சரித்திரம் அன்றைக்கே நிரூபித்துக் காட்டியது.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பதினொரு பேர். மீண்டும் துப்பாக்கிச் சூடு. மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது. வெள்ளைக்கார அரசாங்கம். அவன் கேட்கிறான். ‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான்.

அஞ்ச மாட்டேன்

தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான். பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான்.
தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார். அவன் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனுடைய சொல்லைக் கொண்டே மடக்குகிறார்.

இப்படி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தேவர் திருமகனார், தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்தார். தியாகச்சுடர் காமராசர் அவர்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்தார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் தென்னாட்டு மக்கள். தியாக சீலர் பெருந்தலைவர் காமராசர் அவர்களை நான் மதிக்கிறேன். பதவிக்காலத்தில்கூட தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாது, தன் தாயைப்பற்றிக்கூட கவனிக்காது வாழ்ந்து மறைந்த உத்தமர்தான் காமராசர். அவரை நான் மதிக்கிறேன்.....

Thanks :thevar.info





Tuesday, 27 September 2011

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.



இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார். வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர்.


மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.தவசிக்குறிஞ்சி, பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக்குறிக்கும். தவசிக்குறிச்சி என்னும் ஊர் இராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் யாரும் நுழையமுடியாத அளவிற்கு விளங்குகிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்..........




நம்முடைய கடவுளின் பிறப்பு :




30.10.1908 ஆம் ஆண்டு தேவர் திருமகன் பிறந்தார். 32 கிராமங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊர்கள் அனைத்தும் கூடி உள்ளம் கனிந்தது.வீரமும், விவேகமும், நேர்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே வைக்கவேண்டும் என்று அப்பெயரையே தேவர் திருமகனுக்கு வைத்தனர். ஆகவே இவர் முத்துராமலிங்கம் என்று அழைக்கப்பட்டார். குழந்தையின் பாசத்தில் அளவுகடந்த எல்லையைத் தாண்டிய அவ்வம்மையார் தங்க தமிழ் மகனை தனியே விட்டுவிட்டு இறந்துவிட்டார். காலனுக்கு கருணை இல்லையே.


உக்கிரபாண்டியத்தேவர் இதயத்தில் பெரும் இடி விழுந்தது என்றே சொல்ல முடியும். அப்போது இந்துமாதக் குழந்தையே தேவர் திருமகன். அப்போது குழந்தையின் அழுகைசத்தம் கேட்டு உக்கிரபாண்டித்தேவர் வெறுப்படைந்தார். அப்பொழுது அவர் கொண்ட வெறுப்பு உக்கிரபாண்டித்தேவர் இறந்துபோகும் வரையிலும் இருந்தது. ஆகத் தன் வாழ்நாளில் தாய் தந்தை பாசமே அறியாது இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.துன்பங்கள் என்பது மழையில் இருக்கும் கல்லை உருட்டி பாதளத்தில் தள்ளிவிடுவது போன்றது அதுபோல் மனிதனின் துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அதுபோல மீண்டும் ஒரு துன்பம் உக்கிரபாண்டித்தேவரை மேலும் தாக்கியது. அவரது இரண்டாவது மனைவியான காசிலெட்சுமியையும் மரணம் வலை வீசிப்பிடித்து இழுத்துக்கொண்டது. குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.


தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியம் பிள்ளை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என அவர் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள். தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்தத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார்.இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.






கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத்
திகழ்ந்தார்


ஆசிரியருக்கே அறிவுரை :


1924 ஆம் ஆண்டு தெய்விகச் செல்வர் தமது ஐந்தாம் வகுப்பை முடித்தார். உயர்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ( u.c.school ) ஐக்கிய கிருஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தவர்.ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம்,ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், “நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்:


“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்…மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது ஒன்றுதான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா…?” சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.


தொடரும்....


நன்றி தேவர் தளம் .....