முக்குலத்தின் பதிவுகள்
Saturday, 15 October 2011
Saturday, 8 October 2011
சோழர்களின் வழித்தோன்றல்கள் நாம் என்று ஆதாரமற்ற வாதங்களை முன் வைக்கும் சில குலத்தினர்
hidden keywords: thevar,devar, history of thevar, kallar, raja raja cholan,mukkulam, kings of tamilnadu,maravar,தேவர், கள்ளர் வரலாற்றுச் சுருக்கம்,Leaders
இன்னுமொரு முறை சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைய நான் விரும்பவில்லை. அறிவுச் சுரங்கத்தின் கதவுகளைத் திறந்தவன் என்று அனைவரின் நினைவிலும் நிற்கவே நான் விரும்புகிறேன் -
Where Have All The Leaders Gone?
லீடர்ஷிப் (தலைமைக்குணம்) என்கிற வார்த்தையை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறோம்.
பெரும்பாலான பொதுமக்களைப் பொறுத்தவரை, 'தலைவர்' என்பது ரொம்பப் பெரிய பதவி, பொறுப்பு, கௌரவம். மிகச் சிலர்மட்டும்மே அதற்குத் தகுதியானவர்கள், மற்றவர்கள் எல்லோரும் கீழே கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, எல்லோரிடமும் அந்த குணங்கள் இருக்கின்றன. அவற்றை வளர்த்தால் போதும்.
ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும்? அதற்கு தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவிதமாக 'வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான்?' (Where Have All The Leaders Gone?') என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியிருப்பவர்கள், பிரபல மேலாண்மை நிபுணர், உலகப் புகழ்ப் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி.
'அநாவசியமா தலைவர்களைத் தேடித் போய்க்கிட்டிருக்காதீங்க, கொஞ்சம் முயற்சி செஞ்சா நீங்களே தலைவராயிடலாம் என்கிறார்கள். இதற்கு 9 'சி' தேவை என்கிறார்கள். 9 'சி' என்றதும் நம்ம ஊர் ஸ்டைலில் 9 கோடி என்று நினைத்துவிட வேண்டாம். '9சி' என்பது 'சி' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது.
1. Curiosity - ஆர்வம்
ஒரு தலைவன் எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்கிற ஆர்வத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்கள் செம்மறி ஆடுகளைப்போல் ஒரே பாதையில் நடந்து சென்றால்கூட, நாம் மட்டும் சுற்றியுள்ள மற்ற பாதைகளைக் கண்காணிக்க வேண்டும், 'இந்த பக்கம் போனால் என்ன?' என்று யோசிக்க வேண்டும், அந்த ஆர்வம்தான் நமது முன்னேற்றத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது!
2. Creativity - படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை
தலைவர்கள் யாரும் நடக்காத பாதையில் நடந்தால்மட்டும் போதாது, யாரும் செய்யாத ஒன்றைச் செய்கிற திறமையும் படைப்புணர்ச்சியும் வேண்டும். பிறர் கண்ணில் படாத விஷயங்கள் கூட, இவர்களுடைய மனக்கண்ணில் தோன்றவேண்டும், அரைத்த மாவையே அரைக்கிற குணம் பயன்படாது!
3. Communication - தகவல் தொடர்பு
ஒரு விஷயம் கவனித்தீர்களா? பெரிய தலைவர்கள் எல்லாம் பிரமாதமான பேச்சாளர்களாக இருப்பார்கள். அதற்காக நாம் மேடையேறி முழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை, நமது குடும்ப உறுப்பினர்கள், அலுவலகத் தோழர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எதையும் சரியானமுறையில் தெளிவாக விளக்கிச் சொல்லி அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுகிற திறன் வேண்டும்.
4. Character - ஒழுக்கம்
கையில் ஒரு பதவி, பொறுப்பு வந்துவிட்டால் நம் இஷ்டம்போல் தப்புச் செய்யலாம் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் தலைவர்கள் தப்பு செய்யக்கூடாது.
5. Courage - தைரியம்
சிலர் நன்கு வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால், செயல் என்று வந்துவிட்டால் ஒதுங்கி நிற்பார்கள். அவர்களால் எப்போது தலைவர்களாக முடியாது.
6. Conviction - உறுதி
ஒரு தலைவரின் பாதையில் ஏகப்பட்ட குருக்கிடல்கள் வரும். அப்போதெல்லாம் 'போதுமடா சாமி' என்று திரும்பிச் செல்லாமல் முன்னேறுபவர்கள்தாம் தலைவர்கள்.
7. Charsima - ஈர்ப்பு / கவர்ச்சிகரமான ஆளுமை
ஈர்ப்பு என்று சொல்வது வெறும் முக அழகுமட்டுமல்ல, அடுத்தவர்கள்மீது வெளிக்காட்டும் அக்கறை, அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் தன்மை, அன்பாகப் பேசும் விதம் போன்றவை எல்லாமாகச் சேர்த்து ஒரு தலைவரைத் தீர்மானிக்கிறது
8. Competence - திறமை / தகுதி
நாம் எந்தத் துறையில் இருக்கிறோமோ, அதுபற்றிய ஞானம் ஒரு தலைவருக்கு மிக அவசியம். அது தெரியாமல் மற்ற குணங்களை மட்டும் வைத்துத் தலைவர்களானவர்கள் ரொம்ப நாள் நீடித்து நிற்கமுடியாது.
9. Common Sense - யதார்த்த அறிவு
எப்பேர்பட்ட தலைவரும், அந்தரத்தில் கொடிகட்டமுடியாது. எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும், எதார்த்தத்தைப் புரிந்து, தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள்.
இந்த 9 சியில் உங்க ஸ்கோர் என்ன? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைபடுகிறது? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளுங்கள், நீங்களும் தலைவராகலாம்.
கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் -
----------------அள்ளுர்கிழான் சாமிகரிகாலன்
தமிழகத்தின் தொல் முதுகுடியைச் சேர்ந்தவர்கள் கள்ளர்கள் ஆவார். இவர்களைப் பற்றி பல அறிஞர்கள் பலவாறான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.
வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.
சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.
கள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.
கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.
"கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடியினர் "
என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கூறுவார்.
மேலும் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ் வள்ளல்கள் என்ற நூலில்.
இவ்வாறாக பலபடி போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்கான இக்குடியினரைப் பற்றி நாம் சிறிது அறிந்து கொள்வது நலமாகும்.
சோழர்களின் வழித்தோன்றல்கள் நாம் என்று ஆதாரமற்ற வாதங்களை முன் வைக்கும் சில குலத்தினர்
1. சாணார் (நாடார், ஈழவர்),
2. முத்தரையர்,
3. செங்குந்தர் (கைக்கோள நெசவாளர்),
4. மள்ளர் (பள்ளர்),
5. பள்ளி ( படையாச்சி, வன்னியகுல சத்திரியர்),
6. வேளாளர்.
மேலும் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,மற்ற இலக்கியங்களையும் படைத்தனர்.
ஈழவர் என்றும்,பின்னர் சாணார் என்றும், தற்போது நாடார் என்றும் அழைக்கப்படும் மக்கள் 'வலங்கைமாலை' 'சாணார் குலமரபு காத்தவர் சாணார் விதர்ப்ப வினாவிடை' 'நாடாரும்,நாயக்கர் மன்னர்களும்' போன்ற நூல்களையும் எழுதினர்.
செங்குந்தர் என்று தம்மை உயர்வாகக் கூறி வரும் கைக்கோள நெசவாளர் 'ஈட்டிஎழுபது' என்ற நூலை எழுதினர்.
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக 'சிலைஎழுபது' என்ற நூலை தோற்றுவித்தனர்.
வேளாளர் என்போர் ஏரெழுபது, திருக்கைவளக்கம். வேளாளர்புராணம்,சதகங்கள் போன்ற நூல்களை எழுதினர்.
மறவர் 'வான் எழுபது' என்ற நூலையும்,சேனைத்தலைவர் சேனைகுலத்தார் பட்டயம்,சேனைத் தலைவர் மரபு காத்தல்' என்ற நூலையும் எழுதினர்.
1. சாணார் (நாடார், ஈழவர்)
சான்றோர்'என்ற ஒற்றைச் சொல் பற்றி
சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றோர் என்பதிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது.இது உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.
அவர் தமிழ்மறவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.
வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும், நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும்
1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரிய மனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல் தான் தாங்கள் சத்திரியர் இனம் என்பதும்,நாடார் என்ற பட்டம் நாடாள்வான் என்பதிலிருந்து வந்தது என்பதும். நாடார் என்பது உண்மையில் நாடாவி என்பதிலிருந்து வந்தது. உண்மையில் நாடாள்வான் மற்றும் நிலைமைக்காரன் என்போர் கள்ளர் இனத்தைச் சார்ந்த மக்கள் ஆவார்கள்.
2. முத்தரையர்
முத்தரையர் யார்?
முத்தரையர் என்போர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கலாம். முத்தரையர் என்பது முத்து+அரையர், முத்து அரசர் அதாவது முத்து சல்லாபத்தில் ஈடுபடுபவர் என்று பொருள் கொள்ளலாம்.முத்து சல்லாபம் என்பது சங்க காலத்தில் பாண்டியநாட்டின் கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.அதில் ஈடுபட்டவர் பாண்டியநாட்டு வணிகர்கள்.இவர்கள் மத்தியகிழக்கு மற்றும் உரோமாபுரி முதலிய மேல்நாடுகளுடன் வியாபாரம் செய்துவந்ததாக சங்க இலக்கியங்கள்,வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மேல்நாட்டார் பயணக்குறிப்புகள் விளக்குகின்றன.எனவே,முத்து வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றினரா?என்ற கேள்வி எழுகிறது.பாண்டியருக்கும்,முத்தரையருக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் பாண்டியநாட்டு வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வழுப்படுத்துவதாக உள்ளது.
(1)முத்தரையர் ஆரம்பத்தில் சமண சமய சார்புடையவராக இருந்தனர்.பாண்டிய மன்னர்களும் சமய சமயச் சார்புடையவராக இருந்திருக்கின்றனர்.சோழ இளவரசியை மணந்த கூன்பாண்டியன் ஆரம்பத்தில் சமண சமயச் சார்புடையவராய் இருந்தான்.முத்தரையர் காலத்தில் தோன்றிய நாலடியார் என்ற நூல் சமண சமயச் சார்புடையது ஆகும்.
(2)முத்தரையரின் சின்னம் மீன் ஆகும்.பாண்டியரின் சின்னமும் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.
(3)முத்தரையர் மன்னர் மாறன் என்ற பட்டம் தரித்திருந்தனர். வேல்மாறன், வாள்மாறன், சுவரன்மாறன், மாறன் பரமேஸ்வரன், செருமாறன், மாறன் என்பது பாண்டியர்களின் பட்டம் என்பது நமக்குத் தெரியும். அதாவது,மாறவர்மன்,மாறன் குலசேகர பாண்டியன்,மாறன் சடையன்....
(4)முத்தரையர் மல்லன் என்ற பெயர் தரித்திருந்தனர்.மல்லன் அநந்தன்,மல்லன் வதுமன்,சத்ரு மல்லன் என வழங்கினர்.மல்லன் என்பது சேர,சோழ,பாண்டியரின் குடிப்பெயராகும்.
(5)முத்தரையர் தென்னவர் எனவும்,தமிழ்திரையன் எனவும் மற்றும் மீனவன் எனவும் வழ்ங்கியுள்ளனர். இப்பட்டங்கள் பாண்டியருக்கு உரியதாகும்.
முத்தரையர் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடு உள்ளதாக புதுக்கோட்டை வரலாறு கண்ட திரு ஜெ.இராஜாமுகமது கூறுகிறார்.(அ)முத்தரையர் களப்பிரர் கிளைக்குடி என எஸ்.கே.அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.ஆனால் களப்பிரரிலிருந்து முத்தரையர் எப்படி வந்தது என்று விளக்கவில்லை.(ஆ)முத்தரையர் என்போர் பல்லவர் என வெங்கடசாமி நாட்டாரும்,கள்ளர் என இராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் என்பது முத்து+அரையர்,அரையர் என்பது நாடாள்வோர் என்பதையும் குறிக்கும். 'அரையனாய மருளகமாளவதற்கு'(தேவாரம்- 648.4)
*முத்தரையர் மாறன்,மீனவன்,தென்னவன் போன்ற பாண்டியரின் குடிப்பெயரைப் பெற்றிருந்த செய்தியைப் புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
*செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச்சின்னம் கயல்(மீன்)எனக் காணப்படுகிறது.இதனை ஆய்வு செய்யும்போது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
(திரு.இராஜா முகமது,புதுக்கோட்டை வரலாறு,பக்கம் 18)
3. செங்குந்தர் (கைக்கோள நெசவாளர்)
இந்த மக்கள் கோயிலில் பணிபுரிவதற்கும்,ஆண்கள் தேவாரம்,திருவாசகம் ஓதுவதற்கும்,பெண்கள் நடனமாடுவதற்கும்,பாடுவதற்கும் நியமனம் பெற்றதைப் பற்றி ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
எல்லா ஊர்களிலும் இவர்களுக்குத் தனித் தெருக்கள் இருந்தன.இவர்களுக்கு சில சிறப்பு உரிமைகளும் இருந்தன.இவர்களுக்கு முதலி என்ற பட்டமும் வழங்கிற்று.இவர்கள் படைப்பிரிவில் ஈடுபட்ட ஆதாரம் இல்லை.
4. மள்ளர் (பள்ளர்)
தேவேந்திர இனத்தவர் சோழர் வழியினர் என்றும் உரிமை கோருகின்றனர்.அவர்கள் அனைவரும் சோழர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்களா? சோழர் என்ற பெயருடன் இம்மக்கள் மட்டும் வாழும் பகுதி உள்ளதா?
சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம் தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை. உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது. உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த மள்ளர்களும் போர்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
மல் என்ற சொல்லுக்குச் செல்வம் என்று பொருள். மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள். அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு. வளப்பம் என்ற பொருளும் உண்டு.
வளப்பம் என்ற பொருளும், திண்மை என்ற பொருளும், செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு (டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி). எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை, செழுமை என்று வருகிறது. மல்-மல்லர், மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
படைகளில் சிறந்து விளங்கிய இனத்தாருக்கு பல்வேறு பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன. சேரனார். சோழன், பல்லவராயர், முனையரையர் போன்ற பட்டங்களை பிற இனத்தினர் பெற்றுள்ளபோது இது போன்ற பட்டப்பெயர்கள் மள்ளர்களாகிய பள்ளருக்கு ஏன் இல்லை?
மள்ளர் என்பார் பழமை வாய்ந்த குடியினர்.உழவர்களாகவும் போர் வீரர்களாகவும் விளங்கியவர்கள். இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவர்கள் பேரரசர்களின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாதது வியப்பானது. சோழர் காலச் சமுதாயம் , தொகுதி - 4.
இடைக்காலத்தில் இம் மள்ளர்கள் நிலை என்ன? மற்ற குடியினர் பற்றியும் அவர்கள் பொது வாழ்வில் செய்த கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது இவர்கள் பற்றி மட்டும் குறிப்புகள் ஏன் இல்லை?
மள்ளர் என்பார் மருத நிலத்தவர். இடைக்காலத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பிற்குப் பெயர் இல்லையா? மள்ளர் நாடு என்று இருந்ததா? வேளிர்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் உள்ள மள்ளர்கள் தற்போது எங்கே உள்ளார்கள்? இடைக்காலத்திலும் சோழர்,பாண்டியர் ஆட்சி செலுத்தினர். அப்போது செல்வாக்குள்ளவர்களாக சில குடியினர் அறியப்படும்போது மள்ளர் நிலை என்ன ?(பிற்கால) சோழர் காலத்தில் ஆட்சி செய்த குறு நில மன்னர்கள் யாரும் மள்ளர் அல்ல. கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன.
மள்ளர்,மல்லர் எனத் தேவைக்கேற்ப பொருள் கொள்வது சரியா என்பதை ஏனையோர் கூறுவதை விட வரலாற்றுத் துறை ஒப்புக்கொள்ளுமா? "மல்லன்" என்ற பட்டம் வன்னியருக்கும் உண்டு. சமீபத்தில் நான் கண்ட ஒரு நூலில் அவர்களது பட்டப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.அவற்றில் மல்லன் என்பதும் ஒரு பட்டமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
5. பள்ளி ( படையாச்சி, வன்னியகுல சத்திரியர்)
தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.
நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).
செல்வாக்குள்ள மள்ளர் இனத்தவர் ஏன் ஒருவர் கூட சிற்றசராய் அறியப்படவில்லை?கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.
பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)
மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).
விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)
வன்னியர்களும் வெள்ளைக் குடை, வெள்ளை யானை, தேர் போன்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர்.
6. வேளாளர்
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத் தில்லறத்தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும் வேளாளரே.
"வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.
வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள். "வேளாண் வாயில் வெப்பக்கூறி"
பதினெண் குடிமக்கள்
வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான்,கைக்கோளன், பூக்காரன், கிணையன், பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாளரும், உழவனுக்குப் பக்கத்துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர்".
கி.பி.12 ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டு ஒன்றில் வரும் வாசகம்: "பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில் ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்" என்கிறது.
இதன் பொருள்: பெருங்குடிகள் செலுத்தவேண்டிய வரிக்காக அந்தப் பெருங்குடியிடம் வாரக்குடியாக இருக்கும் வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து இக்கல்வெட்டு மூலம் தடை செய்யப்பட்டதையும் குறிக்கும்.
முக்குலம் வாழ்க வெல்க வளர்க.
தொடர்கிறது....
for more details :
http://kallarperavai.hpage.com/
Tuesday, 4 October 2011
வீரவேல், வெற்றிவேல் !!!
hidden keywords: thevar,devar, history of thevar, kallar, raja raja cholan,mukkulam, kings of tamilnadu,maravar,தேவர்,
விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்..!
-சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது. சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ...ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார்.
இது ஒரு ஆரம்பம் :
தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது. “அனைவரும் வாருங்கள். நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது. நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள். ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார். அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப் புறப்படட்டும். இன்னொரு பிரிவு பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை சென்று அரண்மனைக்கு வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது படைகளையும் தாக்கி வெற்றி கொள்ளட்டம்,” என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே சின்ன மருது அவசரமாய் இடைமறித்து, “மகாராணி சிவகங்கைக் கோட்டையைக் கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…”
“சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள் படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?”
“மகாராணி மன்னிக்க வேண்டும். சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது. அந்தக் கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?”
இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.
அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.”
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விர்ந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். “பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு,
வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!” என்றபடியே ராணி சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.
ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
பூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது.
வீரவேல்! வெற்றிவேல்!!
வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் வளரியும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
“சார்ஜ்!..” என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். சிவகங்கைக் கோட்டைக்குள் பூகம்பம் வெடித்தது.
ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது. ஆயுதமின்றித் தவித்த சிலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே குதித்தாள். அந்தப் பெண் நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில் வந்து விழுந்தாள்.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும் அஸ்தியில் காய்ச்சல் கண்டது.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதே நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி அடித்துவிட்டு வெற்றியோடு வந்தார்.
திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்கள் மட்டும் கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன.
நம் குல வீர தாயின் தியாகம்:
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!
எழுதியவர்: கீதா ரவீந்திரன்
முக்குலம் வாழ்க வெல்க வளர்க.
தொடர்கிறது....
Saturday, 1 October 2011
முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்..
hidden keywords: thevar,devar, history of thevar, kallar, raja raja cholan,mukkulam, kings of tamilnadu,maravar,தேவர்,
முடங்கி கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும்... எழுந்து எழுச்சியுடன் போராடினால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்..
தலைசிறந்த தலைவர் தெய்வத் திருமகன் தேவர்
Richard Nixon என்ற அமெரிக்க ஜனாதிபதி “Leaders” என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தலைசிறந்த தலைவனின் காலடித்தடத்தில் வரலாற்றின் இடிமுழக்கத்தை கேட்கிறோம். நூற்றாண்டுகள் பல கடந்து – கிரேக்கம் முதல், ஷேக்ஸ்பியர் தொட்டு, தற்காலம் வரை – சில செய்திகள் தொடர்ந்து வரலாற்று ஆசிரியர்களுக்கும் கவிஞர்களுக்கும் காவியம் படைக்க உந்துகோலாக திகழுமேயானால் அது ஒரு தலைசிறந்த, ஒப்பற்ற ஒரு தலைவனின் நற்பண்புகளும், அவனின் தனிச் சிறப்புமேயன்றி வேறொன்றில்லை.”
எது மற்ற மாந்தர்களில்ருந்து ஒரு தலைவனை வேறுபடுத்துகிறது?எந்த குணம் அளவற்ற காந்தத் தொடர்பை ஒரு தலைவனுக்கும் மக்களுக்கும் இடையே காலம் கடந்தும் காத்து நிற்கிறது? எது ஒரு தலைவனின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறதென்றால், அவனின் முக்கியத்துவமும் அவன் மக்கள் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கமுமேயாகும். ஒரு நாடகத்தின் திரை விழுகும்பொழுது, பார்வையாளர்கள் நாடகத்தை மறந்து தத்தம் வாழ்க்கைக்கு திரும்பிவிடுகின்றனர். ஆனால் ஒரு மகத்தான தலைவனின் வாழ்வில் திரைவிழுகும் பொழுது, அவனது வாழ்க்கை ஒரு நாட்டின் வரலாற்றையே முற்றிலுமாக மாற்றிவிட்டிருக்கும்.”
இந்த எண்ணங்கள் இன்று என் மனத்தில் உதித்தமைக்குக் காரணமாக அமைந்தது, நான் இன்று பசும்பொன் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றினை, நமது தாய்த் திருநாட்டின் விடுதலை வேழ்வியில் அவரது வீரமிகு அருஞ்செயல்களை படித்தமையே ஆகும்.

தேவர் திருமகனார் ஒரு விடுதலை போராடட்ட வீரர் மட்டுமல்லர் அவர் கோடானுகோடி ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்க வீரச்சமர் புரிந்து அவர்களை காத்து நின்ற காவல் தெய்வமாவார். அவர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்குத் தடையாய் நின்ற சமூக, மூடப்பழக்க வழக்க, அரசியல் கொடுங்கோன்மைகளிலிருந்து மீட்க்க தன் வாழ்வையே தியாகம் புரிந்த ஒப்புயர்வற்ற தன்னலமற்ற தலைவராவார்.
“வள்ளலார்” என்ற பெயர் ஸ்ரீ ராமலிங்க அடிகளாரை மட்டுமே குறிக்கும்
“பெரியார்” என்ற பெயர் E.V.ராமசாமி நாயக்கரை மட்டுமே குறிக்கும்
“அண்ணா” என்ற பெயர் C.N. அண்ணாதுரையை மட்டுமே குறிக்கும்
அதுபோல்
“தேவர்” என்ற பெயர் தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை மட்டுமே குறிக்கும்.
சென்னையில் நேதாஜி
முக்குலம் வாழ்க வெல்க வளர்க.
தொடர்கிறது....
thanks to thevar info
Thursday, 29 September 2011
நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்-நேதாஜி
இந்திய சுதந்திர மாற்றங்கள் :
பசும்பொன் தேவர் திருமகனார் உணர்ச்சிமயமான உரை :
இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.
அந்த நாள்..
1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.
ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!
ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.
நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.
நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.
அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல - பஞ்சாபிகள் அல்ல - மராத்தியர்கள் அல்ல - குஜராத்திகள் அல்ல - ஒரியாக்காரர்கள் அல்ல - எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.
அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.
அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார். இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.
நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர். அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!
இந்திய மாற்றங்கள்:
பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர். கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.
அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.
வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும். நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.
முக்குலம் வாழ்க வெல்க வளர்க.
தொடர்கிறது....
thanks to thevar info
Wednesday, 28 September 2011
தேவர் புகழ் வாழ்க
தேவர் திருமகன் முதல் மேடை

1933 ஆம் ஆண்டு. விவேகானந்தர் முதலாவது ஆண்டுவிழா என்ற நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக மேடையில் முழங்குகிறார் தேவர் திருமகன். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பெயர் சேதுராமன் செட்டியார். இதை நான் குறிப்பிடக் காரணம், இதை மறக்காமல் இருந்து, பிறிதொரு கட்டத்தில் ஒரு தேர்தல் களத்துக்குப் போகிறபோது, ‘சகோதர சகோதரிகளே’ என்று சிகாகோவில் நடைபெற்ற அனைத்து உலக நாடுகளின் சமய மாநாட்டில் முழங்கி, உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினாரே, பரஹம்சரின் தலைமை சீடர் விவேகானந்தர், அவரைப்பற்றிப் பேச தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த சேதுராமன் செட்டியாரை, ஒரு தேர்தல் களத்தில் தன் சமூகத்தைச் சேர்ந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர் போட்டி இடவேண்டும் என்பதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தபோதும், அதைத் தவிர்த்துவிட்டு, சேதுராமன் செட்டியாரைத் தேர்தல் களத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த பெருமகன்தான் தேவர் திருமகன் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
களப்போர்
பசும்பொன் தேவர் திருமகனார், அப்போது இருந்த அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து அரசியல் களத்தில் போராடுகிறார். இங்கே குறிப்பிட்டார்களே, ஆங்கில ஆட்சியாளர்களால் மிகப்பெரிய அடக்கு முறைக்கு ஆளானது முக்குலத்தோர் சமுதாயம். விடுதலை வரலாற்றிலே பிரிட்டிக்ஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குப் பலியான சமுதாயம். ஒவ்வொரு விதமான அடக்குமுறை இருக்கும்.
ரேகைச் சட்டத்தின் கொடுமை
தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமை அடக்குமுறை, அமெரிக்க நாட்டிலே அண்மைக் காலம்வரை கருப்பர்களுக்கு எதிரான அடக்குமுறை. இந்த நாட்டிலே விதைக்கப்பட்ட வர்ணாசிரமத்தின் காரணமாக நிகழ்த்தப்படு கின்ற, நிகழ்த்தப்பட்ட அடக்குமுறை, அன்றைக்கு முக்குலேத்தோர் சமுதாயத்துக்கு விளைந்த அந்த அடக்குமுறைக்கு என்ன காரணம் என்று கேட்டால், 1897 ஆம் ஆண்டு, 1911 ஆம் ஆண்டு 1923 ஆம் ஆண்டு இந்த மூன்றுமுறையும் குற்றப்பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டது. ரேகைச்சட்டம்.
அந்தச் சட்டத்தின்படி, இவர்கள் எல்லாம் குற்றவாளிகள், இந்த இனத்தில் இந்தக் குடும்பங்களில் பிறந்தவர்கள், இவர்கள் எல்லோரும் குற்றவாளிகள், குற்றம் செய்யக்கூடிய பரம்பரையினர், குற்றப்பரம்பரையினர். ஆகவே, இவர்கள் தங்களது ரேகைகளைக் காவல் நிலையங்களில் போய்ப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்ல. இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை, காவல்நிலையத்தில்தான் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர்களுக்கு நீதியின் கதவுகள் திறக்காது. இந்தக் கொடுமை இந்தியத் துணைக்கண்டத்தில் வேறு எங்காவது உண்டா?
அதனுடைய 10 ஏ பிரிவு மிகக்கொடுமையானது. அதன்படி, ‘நான் ரேகை கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னால், அதற்கு அபராதமும் போட்டு ஆறு மாதங்கள் சிறையில் தள்ளலாம். இந்தக் கொடிய சட்டத்தை எதிர்த்து, ஜார்ஜ் ஜோசப் என்பவர் முதலாவது தர்ம யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். அந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து நடத்தியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.
அடக்குமுறைக்கு அஞ்சாதே
ரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறபோதுதான் அவர் சொன்னார்; கொடும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சமூகத்து வீரவாலிபர்களைப் பார்த்துச் சொன்னார்; ‘அடக்குமுறைக்கு அஞ்சாது வாருங்கள், ரேகை புரட்டுவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம், ரேகை கொடுக்காதீர்கள்’ என்றார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் சீறி எழுந்தார்கள் தென்னாட்டில். துப்பாக்கிகளால் அவர்களை மிரட்டமுடியாது என்பதை சரித்திரம் அன்றைக்கே நிரூபித்துக் காட்டியது.
குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பதினொரு பேர். மீண்டும் துப்பாக்கிச் சூடு. மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது. வெள்ளைக்கார அரசாங்கம். அவன் கேட்கிறான். ‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான்.
அஞ்ச மாட்டேன்
தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ உடனே அவன், ‘இதற்கு என்ன பொருள்?’ என்கிறான். பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.
இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான்.
தேவர் திருமகன் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.
எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் தேவர் திருமகன்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்கிறார். அவன் கேட்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவனுடைய சொல்லைக் கொண்டே மடக்குகிறார்.
இப்படி அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தேவர் திருமகனார், தென்னாட்டில் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்தார். தியாகச்சுடர் காமராசர் அவர்களுக்கு அரண் அமைத்துக் கொடுத்தார். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் தென்னாட்டு மக்கள். தியாக சீலர் பெருந்தலைவர் காமராசர் அவர்களை நான் மதிக்கிறேன். பதவிக்காலத்தில்கூட தனக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளாது, தன் தாயைப்பற்றிக்கூட கவனிக்காது வாழ்ந்து மறைந்த உத்தமர்தான் காமராசர். அவரை நான் மதிக்கிறேன்.....
Thanks :thevar.info

Tuesday, 27 September 2011
உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.
இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார். வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர்.
மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.தவசிக்குறிஞ்சி, பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக்குறிக்கும். தவசிக்குறிச்சி என்னும் ஊர் இராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் யாரும் நுழையமுடியாத அளவிற்கு விளங்குகிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்..........
நம்முடைய கடவுளின் பிறப்பு :
30.10.1908 ஆம் ஆண்டு தேவர் திருமகன் பிறந்தார். 32 கிராமங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊர்கள் அனைத்தும் கூடி உள்ளம் கனிந்தது.வீரமும், விவேகமும், நேர்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே வைக்கவேண்டும் என்று அப்பெயரையே தேவர் திருமகனுக்கு வைத்தனர். ஆகவே இவர் முத்துராமலிங்கம் என்று அழைக்கப்பட்டார். குழந்தையின் பாசத்தில் அளவுகடந்த எல்லையைத் தாண்டிய அவ்வம்மையார் தங்க தமிழ் மகனை தனியே விட்டுவிட்டு இறந்துவிட்டார். காலனுக்கு கருணை இல்லையே.
உக்கிரபாண்டியத்தேவர் இதயத்தில் பெரும் இடி விழுந்தது என்றே சொல்ல முடியும். அப்போது இந்துமாதக் குழந்தையே தேவர் திருமகன். அப்போது குழந்தையின் அழுகைசத்தம் கேட்டு உக்கிரபாண்டித்தேவர் வெறுப்படைந்தார். அப்பொழுது அவர் கொண்ட வெறுப்பு உக்கிரபாண்டித்தேவர் இறந்துபோகும் வரையிலும் இருந்தது. ஆகத் தன் வாழ்நாளில் தாய் தந்தை பாசமே அறியாது இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.துன்பங்கள் என்பது மழையில் இருக்கும் கல்லை உருட்டி பாதளத்தில் தள்ளிவிடுவது போன்றது அதுபோல் மனிதனின் துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அதுபோல மீண்டும் ஒரு துன்பம் உக்கிரபாண்டித்தேவரை மேலும் தாக்கியது. அவரது இரண்டாவது மனைவியான காசிலெட்சுமியையும் மரணம் வலை வீசிப்பிடித்து இழுத்துக்கொண்டது. குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.
தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியம் பிள்ளை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என அவர் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள். தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்தத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார்.இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத்
திகழ்ந்தார்
ஆசிரியருக்கே அறிவுரை :
1924 ஆம் ஆண்டு தெய்விகச் செல்வர் தமது ஐந்தாம் வகுப்பை முடித்தார். உயர்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ( u.c.school ) ஐக்கிய கிருஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தவர்.ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம்,ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், “நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்:
“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்…மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது ஒன்றுதான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா…?” சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.
தொடரும்....
நன்றி தேவர் தளம் .....

Subscribe to:
Posts (Atom)